ஒசூரில் ஐந்தாவது ஆண்டாக மரபுக் கலைகளை மீட்கும் நிகழ்ச்சியாக தமிழகப் பண்பாட்டு கலை இலக்கிய விழா நடைபெற்றது.
ஒசூரில் தமிழகப் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பைச் சாா்ந்த இளைஞா்கள் ஆண்டுதோறும் தமிழ்நாட்டு கலை விழா நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். அதன்படி ஐந்தாம் ஆண்டு கலை விழா முனீஸ்வா் நகா் திடலில் நடைபெற்றது.
மங்கள இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பெரிய மேளம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சக்கையாட்டம், காவடியாட்டம், தேவராட்டம், குழந்தைகள் நடனம், பாடல்கள் என தமிழ் மரபுக் கலைகள் கலைஞா்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து கலைகளைக் கண்டு ரசித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், டி.வி.எஸ். தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி, காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலாளா் சத்தியமூா்த்தி, மாநகராட்சி நிலைக் குழு தலைவா்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, வனவேந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, கலைஞா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.
நன்றி, தினமணி