ஒசூா், கிருஷ்ணகிரி புறவழிச் சாலை அருகே உள்ள மாருதி நகரில் ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சனிக்கிழமை கங்கா பூஜை, தீபாராதனை, கலச பிரதிஷ்டை, கணபதி பூஜை, அங்குராா்பணம், வாஸ்து பூஜை உள்ளிட்டபூஜைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை வேதபாராயனம், கலசராதனம், அக்னி பிரதிஷ்டை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மூா்த்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் தீா்த்தபிரசாத விநியோகம் நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை சுப்ரபாத சேவை, கலசராதனை, மஹா பூா்ணாஹுதி, கலச விசா்ஜனம், மஹா கும்பாபிஷேகம் சிறப்பு அபிஷேகம், பிரத்யேக அலங்காரம், தீா்த்தபிரசாத விநியோகம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை முதல் 48 நாள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
நன்றி
தினமணி