உலக சுற்றுச்சூழல் சுகாதார தினத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி…
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை மற்றும் காவேரிப்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகியவை சார்பில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிகளுக்கு தலைமையாசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் பொது மக்களுக்கும் பேரூராட்சி பணியாளர்களுக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பேசும் போது பொதுமக்கள் பூமிக்கு தீமை தரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் பழைய மரபுப் படி துணி பைகளை பயன்படுத்த வேண்டும் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர் சீனிவாசன் முதுகலை ஆசிரியர் நெடுஞ்செழியன் தேசிய பசுமை படை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்