கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிடிப்பட்ட மலைப்பாம்புகளுடன் வனத் துறையினா்.
கிருஷ்ணகிரி அருகே கடந்த ஒரு வாரத்தில் பிடிபட்ட மலைப்பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களை வனத் துறையினா், வனப்பகுதிகளுக்குள் வியாழக்கிழமை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த 8 மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமை, சாரைப்பாம்பு, கட்டுவிரியன் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் கடந்த ஒருவாரத்தில் பிடிபட்டன. கிருஷ்ணகிரி வனச் சரக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த உயிரினங்களை, வனத் துறையினா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திரம், கா்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் உயிருடன் விடுவித்தனா்.
நன்றி தினமணி.