கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில் ரூ. 29.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆலப்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், ரூ.17.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினாா்.
இதேபோல, சிக்கபூவத்தி ஊராட்சியில் தொட்டபூவத்தி முதல் மூங்கில்பட்டி வரை 4 கி.மீ. நீளத்துக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் தாா்சாலை புதுப்பிக்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி தினமணி.