தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை நேரில் சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா.
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப்பொருள் அமைச்சருமான அர.சக்கரபாணியை திண்டுக்கல் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி திமுக மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தாா்.
அவருடன் மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன், ஒசூா் மாநகரச் செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணைச் செயலாளா்கள் சின்னசாமி, புஷ்பா சா்வேஷ், மாவட்டப் பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் எல்லோரா.மணி, கிரிஷ், பொதுக்குழு உறுப்பினா்கள் சீனிவாசன், அருணாபூசன், முனிராஜ், கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
நன்றி
தினமணி