கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை (பறக்கும் படை) தனி தாசில்தார் இளங்கோ, பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர் கிருஷ்ணகிரி – குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் காளிக்கோயில் வாகன சோதனை சாவடி அருகில் வாகன
தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 38 சாக்கு பைகளில் தலா 50 கிலோ எடையில் 1.9 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பள்ளிபட்டி
கிராமத்தை சேர்ந்த அப்பாதுரை மகன் கோபி(18) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திரா மாநிலம் குப்பத்தை சேர்ந்த கணேஷ் என்பவர், பர்கூர் அருகே உள்ள காரகுப்பம் கிராமத்தில் இருந்த தனது காரில் ரேஷன் அரிசியை ஏற்றிவிட்டதாகவும், அதை குப்பத்திற்கு எடுத்து வர சொல்லிவிட்டு அவர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து
அரசியை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட கார் மற்றும் கார் டிரைவர் கோபியை கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)