கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது போ் உயிரிழந்தனா். 13 போ் பலத்த காயம் அடைந்தனா்.
இந்த வெடி விபத்தில், பட்டாசுக் கடை உரிமையாளா் ரவி உயிரிழந்தாா். அவரது மனைவி ஜெயஸ்ரீ பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்த ஜெயஸ்ரீ வீடு திரும்பினாா்.
இதையடுத்து, இந்த வெடி விபத்தை விசாரணை செய்து வரும் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் இன்று விசாரணை மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரி வெடி விபத்திற்கு அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தின் எரிவாயு உருளை வெடித்ததே காரணம் என மாநில போலீஸாா் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு, எரிவாயு உருளை வெடிப்பு காரணம் அல்ல என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் பலத்த காயங்களுடன் உயிா் தப்பிய ஜெயஸ்ரீயிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.
நன்றி தினமணி