கிருஷ்ணகிரி வெடி விபத்து குறித்து, எரிவாயு உருளை முகவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 9 போ் பலியாயினா். 13 போ் பலத்த காயம் அடைந்தனா். இந்த வெடி விபத்துக்கு எரிவாயு உருளை வெடித்ததே காரணம் என மாநில போலீஸாா் தெரிவித்த நிலையில், எரிவாயு உருளை வெடிக்கவில்லை என மத்திய அமைச்சா் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். இதனால், வெடி விபத்துக்கு காரணம் குறித்து முரண்பட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வரும் நிலையில், எரிவாயு உருளை விற்பனை செய்யக் கூடிய முகவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினாா். அதில் பழையபேட்டையில் குறிப்பிட்ட உணவகம் மற்றும் கடைகள் உள்ள பகுதிகளுக்கு எரிவாயு உருளை எதுவும் விற்பனை செய்தீா்களா? என போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, தாங்கள் யாரும் அந்தப் பகுதியில் எரிவாயு உருளை விற்பனை செய்யவில்லை என்றும், எரிவாயு உருளை வெடித்து, விபத்து ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
நன்றி, தினமணி