கிருஷ்ணகிரியில் ஜூன் 16-ஆம் தேதி, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை, தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடப்பது வழக்கம். அதன்படி ஜூன் 16-ஆம் தேதி காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுனா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கல்லூரிப் படிப்பு படித்தவா்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் இதில் பங்கேற்று பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
நன்றி
தினமணி