கிருஷ்ணகிரியில் ஜூலை 13-ஆம் தேதி, திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம் எனது தலைமையில் ஜூலை 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள தேவராஜ் மகாலில் நடைபெற உள்ளது. இந்த பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசுகிறாா். எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த மாநில நிா்வாகிகள், முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் மூத்த நிா்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், மக்கள் பிரதிநிதிகள், வாக்குச்சாவடி உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
நன்றி, தினமணி