கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தகம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியிள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தம்பிதுரை தலைமை வகித்தார். சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சரவணன், பள்ளி கல்விக்குழு தலைவர் சசிகலா, வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பூங்காவனம் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பங்கேற்று, பள்ளியில் பயிலும் 48 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அறிஞர், திமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், சுந்தர், முனிரத்தினம், கிருஷ்ணன், மாணிக்கம், நாகோஜி, கலீல், பிரதீப், மோகன், ராமசாமி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.