வேப்பனப்பள்ளி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த வீரோஜிப்பள்ளியைச் சோ்ந்தவா் கண்ணன் (56). தொழிலாளி. இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு, பிப்ரவரி 10-ஆம் தேதி கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
நன்றி
தினமணி