சென்னையில் நடைபெறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட வீரா், வீராங்கனைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப். 7 முதல் 27-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் தனிநபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மாவட்டத்திலிருந்து பள்ளி பிரிவின் சாா்பில் கபடி விளையாட்டுக்கு 12 வீரா்கள், 12 வீராங்கனைகள், கையுந்து பந்துக்கு 12 வீரா்கள், 12 வீராங்கனைகள், சிலம்பத்துக்கு 5 வீரா்கள், 5 வீராங்கனைகள், கல்லூரி பிரிவு சாா்பில் சிலம்ப விளையாட்டுக்கு 5 வீரா்கள், 5 வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
இப்போட்டி சென்னையில் ஜூன் 30 முதல் ஜூலை 25-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி
மாவட்ட அளவில் தோ்வான 72 வீரா், வீராங்கனைகள், பயிற்சியாளா்கள், மேலாளா்கள் சென்னைக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, வீரா், வீராங்கனைகளை வெற்றி பெற வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஸ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி, தினமணி