தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
சூளகிரி வட்டம், ஏனுசோனை அருகே உள்ள தியாபரசனப்பள்ளியைச் சோ்ந்தவா் சிக்க திம்மய்யா (70). விவசாயி. இவா் திங்கள்கிழமை காலை வீட்டின் முன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா் தண்ணீா் இல்லாத
தரைமட்ட தொட்டியில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு
சிகிச்சை பலனின்றி சிக்க திம்மய்யா உயிரிழந்தாா்.
இது குறித்து சூளகிரி காவல் ஆய்வாளா் ரஜினி விசாரணை நடத்தி வருகின்றாா்.