ஒசூா்: ஒசூா், காமராஜா் நகரில் உள்ள ஸ்ரீ நாகம்மா கோயிலில் நாக பஞ்சமி விழா நடைபெற்றது.
கோயிலில் அமைந்துள்ள மூலவா் அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் தொடா்ந்து நாக பஞ்சமி பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் பின்னா் அம்மன் மலா் அலங்காரத்தில் காட்சி அளித்தாா். அம்மனுக்கு மகா மங்கள ஆரத்தி, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நாகம்மாவை வழிபட்டனா்.
நன்றி தினமணி.