கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, ஒன்றிய, மாநில அரசியல் நிலை குறித்தும், ஒன்றிய அரசை எதிர்த்து வரும் 12, 13, 14ம் தேதிகளில் நடக்கும் மறியல் போராட்டத்தை விளக்கியும் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, வட்டத் துணைச் செயலாளர் கல்பனா, வட்டக்குழு உறுப்பினர்கள் அம்மு, சீனிவாசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மணி, செயலாளர் பூபேஷ் குப்தா, வட்டத் தலைவர் முனிசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட குழு உறுப்பினர் மோகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், வரும் 14ம் தேதி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்எல்ஏ., தலைமையில், கிருஷ்ணகிரியில் நடக்கும் மறியல் போராட்டத்தில் 350 பேர் கலந்து கொள்ள வேண்டும். பர்கூர் ஆற்றில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்து, கழிவுகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மல்லப்பாடியில் இருந்து மரிமாணபள்ளிக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஆற்றில் உடனடியாக பாலம் கட்ட வேண்டும். இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். இந்த ஆண்டு மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.