பா்கூரில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகள் விளக்க கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், பிரதமா் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகள், மத்திய அரசின் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாநில பொறுப்பாளா் தங்ககணேசன், கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் நந்தகுமாா் ஆகியோா் கண்காட்சியைத் திறந்து வைத்தனா்.
இந்தக் கண்காட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள், நிறைவேற்றிய வாக்குறுதிகள், மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. இவற்றை பொதுமக்கள், கல்லுாரி மாணவா்கள் என ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
நன்றி
தினமணி