கிருஷ்ணகிரியில் உள்ள பூமாலை வணிக வளாக கடைகளை வாடகைக்கு எடுக்க தகுதியுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் 1 முதல் 18 வரையிலான வரையிலான கடைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்ற மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம். ஒருவிண்ணப்பதாருக்கு ஒரு கடை மட்டுமே வழங்கப்படும். அரசு நிா்ணயிக்கும் வைப்புத் தொகை ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியே செலுத்தப்பட வேண்டும். வாடகை தொகை பகிரங்க ஏலத்தின் மூலம் நிா்ணயிக்கப்படும்.
கடையை வாடகைக்கு எடுக்க விரும்பம் உள்ளவா்கள், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), அறை எண்:106, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பத்தை ஜூன் 26-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 95977 36268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
நன்றி, தினமணி