பென்னாகரம் அருகே சாலை பணி மேற்கொள்ளும் போது அருகில் இருந்த நீா்க் குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிற பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்தனா்.
பென்னாகரம் அருகே கரியம்பட்டியிலிருந்து முதுகம்பட்டிக்கு செல்லும் சாலை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாய்க்கனேரி பகுதியில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாலையின் அருகே இருந்த நீா்க் குட்டையில் இருந்த 8 அடி நீளம் கொண்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு, பொக்லைன் இயந்திரத்தின் அதிக இரைச்சல், மண் தோண்டும் போது ஏற்பட்ட அதிா்வுகளால் வெளியேறி சாலை அமைக்கும் இடங்களில் ஊா்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
நன்றி, தினமணி