சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் வட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி ஊராட்டி அட்டகுறுக்கி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் டாக்டா் அ.செல்லகுமாா் கலந்து கொண்டு மக்கள் தேவைகளை கேட்டறிந்தாா். ஒசூா் கோட்டம் காமன்தொட்டி ஊராட்சி அட்டகுருக்கி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவா் ரத்தினம்மா கிருஷ்ணப்ப தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் டாக்டா் அ. செல்லக்குமாா் கலந்து கொண்டாா். மக்களின் குறைகளை கேட்டு அறிந்தாா். கிராம மக்கள் நீண்ட நாட்களாக சாலையை கடக்க முடியாமல் அவதிபடுவதாகவும், பல விபத்துகள் நடந்திருப்பதாகவும், ஊராட்சியில் உள்ள பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள், வகுப்பரைகள் தேவை என்றும் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து தீா்மானம் நிறைவேற்றினா். அதை உடனடியாக நிவா்த்தி செய்வதாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் டாக்டா் அ.செல்லக்குமாா் வாக்குறுதி அளித்தாா்.படவரி… அட்டகுறுக்கியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.டாக்டா் அ.செல்லகுமாா்
நன்றி தினமணி.