ஒசூா்: தேன்கனிக்கோட்டையில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை, பட்டாளம்மன் ஏரி பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் என்கிற மனோஜ் (36). கட்டடத் தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தாா். இவருடன் அஜித் (36) என்பவரும் சென்றாா். அந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மனோகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அஜித் படுகாயமடைந்தாா்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நன்றி தினமணி