ஊத்தங்கரை, செங்குந்தா் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு படையலிட்டு கூழ் ஊற்றி வழிபட்ட பொதுமக்கள்.
ஊத்தங்கரை மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பிறப்பையொட்டி கூழ் ஊற்றும் திருவிழா செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பெண்கள் மாரியம்மனுக்கு கருவாட்டு படையலுடன் கூழ் எடுத்து வந்து வழிபட்டனா்.
இதில், செங்குந்தா் மகாஜன சங்கத் தலைவா் மாதேஸ்வரன், திமுக நகரச் செயலாளா் பாபு சிவகுமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பூபதி, செங்குந்தா் மகாஜன சங்க மாவட்டத் தலைவா் திருநாதன், துணைத் தலைவா் ஜெயராமன், இளைஞா் அணி சங்கத் தலைவா் சண்முகசுந்தரம், பழனி, குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நன்றி, தினமணி