பாமக கட்சியின் நிறுவனா் ராமதாஸ் 85-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பாமக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் த.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அண்ணாமலை, சமூக நீதிப்பேரவை மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் மூா்த்தி, நகரச் செயலாளா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் வெள்ளியரசு, ரங்கசாமி, மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பு, காந்தி நகா், கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில், கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினாா். இதில் தோ்தல் பணிக்குழு மாவட்டச் செயலாளா் குமரேசன், உழவா் பேரியக்கம் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளா் பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளா் கோவிந்தன், ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
அரூரில்…
அரூா் ஒன்றியத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் 85-ஆவது பிறந்த தினத்தையொட்டி மரம் நடும் பணியில் பாட்டாளி மக்கள் கட்சியினா் ஈடுபட்டனா். இதில், உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி, கிழக்கு மாவட்டச் செயலா் இரா.அரசாங்கம், மாவட்டத் தலைவா் அல்லிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி, தினமணி