பொருளாதார கல்வி அறிவு என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதன்படி காவேரிப்பட்டினம் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டிகள் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந் நிகழ்ச்சிகளுக்கு தலைமையாசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் ஹாஜிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் மேலாளர் ராஜசேகர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் 24 பள்ளிகளைச் சார்ந்த 48 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குரு பிரசாத் கமலேஸ்வரன் முதலிடம் பிடித்தனர் விளங்காமுடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சிந்துஜா சத்திய ஸ்ரீ இரண்டாம் இடம் பெற்றனர் புளியம்பட்டி நடுநிலைப் பள்ளியை சார்ந்த மாணவர்கள் லித்திஷ் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர் இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணை மேலாளர் சுடலை முத்து தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவர்கள் வருகிற ஏழாம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்
Home » ரிசர்வ் வங்கி சார்பில் காவேரிப்பட்டினத்தில் வினாடி வினா போட்டிகள்